‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. நேற்று முன்தினம் வெளியான இத்திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
’சூப்பர் டீலக்ஸ்’... தாங்க முடியலடா சாமி: ஒளிப்பதிவாளர் நட்டி - தியாகராஜா குமாரராஜா
சென்னை: சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Natti
இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “Super deluxe... தாங்க முடியலடா சாமி. ஏன்டா என்ன பிரச்சனை. அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவதுதான் தரமா? விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன்” என பதிவிட்டுள்ளார்.