தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கொற்றவை டப்பிங் தொடங்கியது! - சிவி குமாரின் கொற்றவை

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கியுள்ள 'கொற்றவை' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

Kottravai
Kottravai

By

Published : Apr 12, 2021, 1:29 PM IST

'பீட்சா', 'சூதுகவ்வும்', 'அட்டகத்தி', 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட வித்தியாசமான மக்கள் மனதில் இடம்பிடித்த படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் 'மாயவன்', 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் தற்போது '4ஜி', 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். தற்போது இவர் 'கொற்றவை' என்னும் புதிய படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில், ராஜேஷ் கனகசபை, வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் காரைக்குடி, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கினர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details