தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது "பட்லர் பாலு" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. அவரோடு இமான் அண்ணாச்சி, மயில்சாமி, ரோபோ சங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் சுதிர் கூறுகையில், முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. எப்படி நடிகர் நாகேஷுக்கு ’சர்வர் சுந்தரம்’ படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ, அதேபோல் யோகிபாபுவிற்கு இந்த ‘பட்லர் பாலு’ படம் அமையும்.