தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எலும்பு முறிவு ஏற்படக் காரணமான பிரிட்னி ஸ்பியர்ஸின் நடனம் - பிரிட்னி ஸ்பியர்ஸ் நடனம்

எலும்பு முறிவு ஏற்பட்டதால் சிகிச்சைப் பெற்றுவரும் ஹாலிவுட் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், அதற்குக் காரணமான காணொலியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விளக்கமும் அளித்துள்ளார்.

Britney shares gut-wrenching video of moment she snapped her foot
Britney shares dance video

By

Published : Feb 28, 2020, 9:53 PM IST

லாஸ் ஏஞ்சலிஸ்: வெறும் காலில் நடனமாடி எலும்பு முறிவு ஏற்பட்ட காணொலியை வெளியிட்டுள்ளார் ஹாலிவுட் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்.

இன்ஸ்டாகிராமில் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார் ஹாலிவுட் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். அதில், மஞ்சள் நிற ப்ரா, கறுப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்து, காலணியோ, ஷூவோ அணியாமல் வெறும் காலில் பின்னணியில் ஒலிக்கும் ராக் ஸ்டைல் இசைக்கு அசத்தலாக நடனமாடுகிறார்.

காணொலியின் முடிவில் ஆடிக்கொண்டிருக்கும்போது நிலைதடுமாறி கீழே அவர் விழுகிறார். இதனால் காலில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. காணொலியில் அவர் கீழே விழும்போது ஏற்படும் சத்தம் எதிரொலியாக ஒலிக்கிறது.

அந்தக் காணொலியில், 'கடந்த ஆறு மாதங்களாக நடனமாடவில்லை. எனவே முழு உற்சாகத்துடன் வெறும் காலில் நடனமாடினேன். எனது கால்களைத் தரையில் நன்கு அழுத்திப் பிடித்தவாறுதான் ஆடினேன். ஆனால் நிலைதடுமாறி கீழே விழுந்து கால்களைக் காயப்படுத்திக்கொண்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் பதிவிட்ட காணொலி ஒன்றில், காலில் கட்டுப்போட்டுக்கொண்டு ரசிகர்கள் எழுதிய கடிதங்களை வாசித்துக் காட்டினார் பிரிட்னி ஸ்பியர்ஸ். இதையடுத்து பிரபல சலூன் ஒன்றுக்கு காயம்பட்ட கால்களுடன் அவர் சென்ற புகைப்படமும் வெளியாகி வைரலானது.

இதைத்தொடர்ந்து பிரிட்னி ஸ்பியர்ஸின் காதலர் சாம் அஷ்காரி, அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். தற்போது அதற்குக் காரணமாக காணொலியை வெளியிட்டுள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ்.

ABOUT THE AUTHOR

...view details