நவரச நாயகன் கார்த்திக் நடித்த 'நந்தவன தேரு' படம் மூலம் நடன இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவார் பிருந்தா. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்டோர் நடித்த படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களிலும் பணியாற்றுகிறார்.
இவர் தற்போது புதிதாக இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி என்று இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்த இசையமைக்கிறார்.