சென்னை: விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்னும் இரு வாரங்கள் தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து இயக்குநர் நெல்சன், நடிகர் விஜயை வைத்து இயக்கும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. தளர்வுகள் அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பீஸ்ட் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் இம்மாதம் தொடங்கியது.
இதில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரு வாரங்கள் நடைபெறும் என்றும், அதன் பிறகு சில நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு வாரத்துக்கு பிறகு ஓய்வு: பீஸ்ட் படப்பிடிப்பு! - கோலமாவு கோகிலா
விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரு வாரங்கள் நடைபெறும் என்றும், அதன் பிறகு சில நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
beast
இதையும் படிங்க:களமிறங்கப்போகிறது மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் காம்போ!