பல்ப் பிக்ஷன், கில் பில்ல போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய குவெண்டின் டாரண்டினோ ஹாலிவுட் இயக்குநரின் சமீபத்திய படம் 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்.' லியானார்டோ டிக்காப்ரியா, பிராட் பிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் வெளியாகி உலகளவில் வசூலில் சக்கைபோடு போட்டது.
'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' பிராட் பிட் சிறந்த துணை நடிகர் - பிராட் பிட் ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்
92ஆவது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை பிராட்பிட் தட்டிச் சென்றார்.
இப்படத்தில் நடித்த பிராட் பிட்டுக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இது பிராட் பிட்டுக்கு இரண்டாவது ஆஸ்கர் விருது ஆகும். இதற்கு முன் பிராட்பிட் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான '12 Years a Slave' சிறந்த படமாக அறிவிக்கப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
இதனையடுத்து இந்த விருது குறித்து பிராட் பிட் கூறுகையில், இந்த விருது நான் வாங்க முழு காரணமும் இயக்குநர் குவெண்டின் டாரண்டினோ தான். என்னுடன் நடித்த லியானார்டோ டிக்காப்ரியா எனக்கு மிகவும் பக்கபலம். அவருடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.