தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் இணைந்த 90களின் பிரபல ஹாலிவுட் ஜோடி - குழப்பத்தில் ரசிகர்கள் - பிராட் பிட் ஜெனிஃபர் ஆனிஸ்டன்

2020ஆம் ஆண்டிற்கான ஸ்க்ரீன் கில்ட் விருதுகள் வழங்கும் விழாவில் சந்தித்த முன்னாள் தம்பதியினரான பிராட் பிட் - ஜெனிஃபர் ஆனிஸ்டன் ஜோடி பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஹாலிவுட் செய்திகள்
பிராட் பிட், ஜெனிஃபர் ஆனிஸ்டன்

By

Published : Jan 25, 2020, 8:00 PM IST

90களின் மத்தியில் ஹாலிவுட்டில் மிகவும் கொண்டாடப்பட்ட பிரபல ஜோடி பிராட் பிட் - ஜெனிஃபர் ஆனிஸ்டன் தம்பதியினர். சுமார் ஐந்து வருடகால மண வாழ்விற்குப் பிறகு இத்தம்பதியினர் விவாகரத்து பெற்றதைத் தொடர்ந்து, பிராட் பிட், ஹாலிவுட்டின் மற்றொரு பிரபல நடிகையான ஏஞ்சலினா ஜோலியை மணந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜோலியுடனான மண வாழ்வும் முடிவிற்கு வந்ததைத் தொடர்ந்து தற்போதுவரை பிராட் பிட் இல்லற வாழ்வில் புகாமல் தனியே வாழ்ந்துவருகிறார்.

இதனிடையே, சமீபத்தில் நடைபெற்ற 2020ஆம் ஆண்டிற்கான ஸ்க்ரீன் கில்ட் விருதுகள் வழங்கும் விழாவில் சந்தித்துக்கொண்ட பிராட் பிட் - ஜெனிஃபர் தம்பதியினர் நீண்ட கால இடைவேளைக்குப் பிறகு, ஒருவரையொருவர் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர். இவர்களின் இந்த வீடியோ இருவரின் ரசிகர்களிடையே உற்சாகத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இவர்களின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்துள்ள நடிகர் பிராட் பிட், ”இதுபற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் பரவசமாகவும், எளிமையாகவும் உணருகிறேன். இதுகுறித்து வேறெதெவும் கூறப்போவதில்லை” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பிராட் பிட் சிறந்த துணை நடிகருக்கான ஸ்கிரீன் கில்ட் விருதையும், ஆனிஸ்டன் தொலைக்காட்சித் தொடருக்கான சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் திரைக்கு வரும் 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்'

ABOUT THE AUTHOR

...view details