வாஷிங்டனில் திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் தங்களது அசாத்திய நடிப்பு கிறமையை வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கு ஸ்கிரீன் ஆக்டர்ஸ் காலிட் அவர்ட்ஸ் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான இந்த விருது விழா நேற்று நடைப்பெற்றது.
இதில் 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' திரைப்படத்திற்காக நடிகர் பிராட் பிட் சிறந்த துணை நடிகர் விருதை பெற்றார். அதே போல் ஜெனிபர் அனிஸ்டன் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் சிறப்பாக நடித்தற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.
இதற்கிடையே ஹாலிவுட் பிரபலங்களும் முன்னாள் இணையர்களுமான பிராட் பிட் - ஜெனிபர் அனிஸ்டன் நிகழ்ச்சிக்கு முன்பு புன்னைகயுடன் கட்டிப்பிடித்துக்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எஸ்.ஏ.ஜி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்தது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.