ரதீந்திரன் ஆர். பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'பூமிகா'. ஐஸ்வர்யா ராஜேஷின் 25ஆவது படம் இதுவாகும்.
இதில் அஸ்வின், குரு சோமசுந்தரம், அபய் தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார்.
'பூமிகா' படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்த நிலையில், திரையரங்குகள் திறப்பதற்காகக் காத்திருந்தன. ஆனால் தற்போதுவரை திரையரங்குகள் திறக்காத காரணத்தினால், 'பூமிகா' திரைப்படம் நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியாகிறது.