தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்திய அளவில் முதல் இடம் - பூமிகாவுக்கு கிடைத்த வரவேற்பு - பூமிகா

ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அப்படத்தின் இயக்குனர் நன்றி தெரிவித்துள்ளார்.

பூமிகா
பூமிகா

By

Published : Sep 1, 2021, 1:15 PM IST

தமிழ் சினிமாவில் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அதிகமாக வெளியாகின்றன. அந்த வரிசையில் கடந்த மாதம் 23ஆம் தேதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் 'பூமிகா'.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த படத்தை இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் இயக்கினார். 'பூமிகா' திரைப்படம் இரண்டு நாள்களாக நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக Top 10 Movies India என்ற பதிப்பில் முதல் இடத்திலும், தமிழ் பதிப்பில் மூன்றாவது இடத்திலும் ட்ரெண்டில் இடம்பெற்றுள்ளது.

பூமிகாவுக்கு கிடைத்த வரவேற்பு

இதுகுறித்து படத்தின் இயக்குநர், "பூமிகா படத்திற்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியில் உள்ளேன். அனைவருக்கும் நன்றி. என்னுடைய எல்லா படைப்புகளிலும் கூட இருந்து வாழ்த்திய, ஊக்கப்படுத்திய அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details