'கோமாளி' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்துள்ள படம் 'பூமி'. அகில உலக பிரச்னையாகக் கருதப்படும் விவசாயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இதில், தெலுங்கு நடிகை நீத்தி அகர்வால், சதீஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
ஜெயம் ரவியின் 'பூமி' பட புகைப்படங்கள் வெளியீடு! - boomi movie
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'பூமி' படத்தின் புதிய புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
![ஜெயம் ரவியின் 'பூமி' பட புகைப்படங்கள் வெளியீடு! பூமி திரைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:29:51:1598342391-img-20200825-wa0014-2508newsroom-1598342305-369.jpg)
பூமி திரைப்படம்
ஜெயம் ரவியின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் படத்தைத் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ரோமியோ ஜூலியட், போகன் என ஜெயம் ரவியின் இரண்டு ஹிட் படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பூமி படத்தின் புதிய புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது. கருப்பு உடையில் மிகவும் கெத்தாக இருக்கும் ஜெயம் ரவியின் அப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. விரைவில் இப்படத்தின் கூடுதல் தகவல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.