ஹெச் வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியிலும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், போனி கபூர் பாலிவுட்டில் தயாரிக்க இருக்கும் புதிய படத்தின் போஸ்டரை தனது சமூகவலைதள பக்கமான ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், இந்திய கால் பந்து வீரர் சயது அப்துல் ரஹிமின் பயோபிக்கில் 'மைதான்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ‘தேசிய விருது’ வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை இயக்குநர் அமித் ஷர்மா இயக்குகிறார். இப்படத்தை போனி கபூர், ஆகாஷ் சவ்லா, அருணவ ஜாய் செங்குப்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனார்.
இந்திய கால்பந்து விளையாட்டின் பொன்னான காலமான 1950-1963 வரை கால்பந்தாட்டத்தில், இந்திய கால்பந்து அணி படைத்த சாதனைகளை போற்றும் வகையில் உருவாகவுள்ளது. 1956ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆசிய கன்னடத்தில் இருந்து முதல் முறையாக செமி ஃபனைலில் நுழைந்த கால்பந்து அணி இந்திய கால்பந்து அணி என்ற பெருமையை பெற்றது.
இது போன்ற சாதனைகளை தற்போது இருக்கும் மக்களுக்கு உணர்த்தும் வகையில் இன்று 'மைதான்' தனது படப்பிடிப்பை தொடங்கி உள்ளது. இப்படத்தின் மூலமாக கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் தனது தடத்தை பதிக்க உள்ளார்.