ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார், கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்து கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் கனிசமான வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ஓரளவு வசூல் செய்துள்ளது.
வலிமை படம் ரூ.200 கோடி வசூல் - வலிமை படம்
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
வலிமை படம் ரூ.200 கோடி வசூல்
இப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலித்த வலிமை திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி முதல் ஜீ 5 (ZEE 5) ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மாதவனின் 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' திரைப்பட ட்ரெய்லருக்கு துபாயில் வரவேற்பு!