தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜேம்ஸ் பாண்ட் நடிகை மறைவு! - The Avengers

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான 'கோல்ட் ஃபிங்கர்' படத்தில் நடித்த நடிகை ஹானர் ப்ளாக்மேன் வயது மூப்புக் காரணமாக காலமானார்.

Honor Blackman
Honor Blackman

By

Published : Apr 7, 2020, 11:28 AM IST

கடந்த 1960 களில் பிரிட்டிஷ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான 'தி அவெஞ்சர்ஸ்' என்ற தொடரில், கேத்தி கேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹானர் ப்ளாக்மேன். இந்தத் தொடரில், அவரின் கதாபாத்திரப் பெயரான கேத்தி கேல், அவரது உண்மையான பெயரை ரசிகர்களே மறந்து போகும் அளவுக்குப் பிரபலமானது.

இதைத்தொடர்ந்து, ஹானர் ப்ளாக்மேன் ஜேம்ஸ் பாண்டின் மூன்றாவதுப் படமான 'கோல்ட் ஃபிங்கர்' (1964) படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 94 வயதான ஹானர் ப்ளாக், வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது," லெவிஸ் நகரில் உள்ள தனது வீட்டில் ஹானர் ப்ளாக்மேன் இயற்கையான முறையில் மரணமடைந்துள்ளார். அன்பான தாயாகவும், பாட்டியாகவும் இருந்த ஹானர் ப்ளாக்மேன் திறமையான நடிகையாகவும் திகழ்ந்தார்.

அழகு, புத்திசாலித்தனம், தைரியம், தனித்துவமான குரல், கடின உழைப்பு ஆகியவற்றுடன் திரையில் வலம் வந்தார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஹானர் ப்ளாக்மேன் மறைவுக்கு ஜேம்ஸ் பாண்ட் தயாரிப்பாளர்கள் மைக்கேல் ஜி. வில்சன், பார்பரா ப்ரக்கோலி, இயக்குநர் எட்கர் ரைட் உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details