இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய பிரிட்டிஷ் ரகசிய உளவாளி ஜேம்ஸ் பாண்ட் கதா பாத்திரம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து 24 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ்பாண்ட்டின் கடைசி திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியான ஸ்பெக்டர். கடைசி நான்கு பாகங்களில் ஜேம்ஸ் பாண்ட்-ஆக டேனியல் க்ரெய்க் நடித்து வருகிறார். இந்நிலையில், இத்தொடரின் 25ஆவது படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, 25ஆவது படத்திற்கு 'நோ டைம் டூ டை' என பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்திலும் டேனியல் க்ரெய்கே கதாநாயகனாக நடிக்கிறார். வில்லனாக ரமி மெல்தி நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8ஆம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு வெளியாவுள்ள ஜேம்ஸ் பாண்ட் படத்துக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் காத்திருக்கின்றனர்.