பாலிவுட் திரையுலகம் தமிழ் சினிமாவை உற்றுப் பார்க்க தொடங்கியிருக்கிறது. இங்கிருந்து பல நடிகர்கள் தங்கள் திறமையால் பாலிவுட்டில் கால் பதித்திருக்கின்றனர். தனுஷ், விஜய் சேதுபதி போன்றோரை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
தமிழ் சினிமாவை ரீமேக் செய்யும் கலாசாரம் பாலிவுட்டில் மேலோங்கியிருக்கிறது. ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ பட ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்திருந்ததை பார்க்க முடிந்து. தற்போது இன்னும் பல தமிழ் படங்கள் பாலிவுட்டுக்கு செல்லவிருக்கிறது. அதன் பட்டியலையும், முன்னணி நடிகர்களையும் காண்போம்.
விக்ரம் வேதா பட ரீமேக்கில் ரித்திக் - சைப் அலிகான்
தடம் பட ரீமேக்கில் ஆதித்யா ராய் கபூர்
சூரரைப் போற்று மற்றும் ராட்சசன் பட ரீமேக்கில் அக்ஷய் குமார்