நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இதனையடுத்து நரேந்திர மோடி இரண்டாவது முறை பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்திய பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நடிகர் ரஜினிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, அவர் தன்னுடைய மனைவி லதா உடன் விழாவில் கலந்துகொண்டார்.
மோடி பதவியேற்பு விழா: ரஜினியுடன் பாலிவுட் பிரபலங்கள் செல்ஃபி! - பிரதமர் மோடி
டெல்லி: மோடி பிரதமர் பதவியேற்கும் விழாவில் கலந்துகொண்ட ரஜினியுடன் பாலிவுட் பிரபலங்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
Rajini
மோடியின் பதவியேற்பு விழாவில் கங்கனா ரணாவத் , இயக்குநர் கரண் ஜோகர், ஷாகித் கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ரஜினியை சந்தித்த அவர்கள், மகிழ்ச்சியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.