ராக்கி என்ற திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து வாவ் என பாராட்டியதுடன் அதனை ஷேர் செய்துள்ளார் நடிகர் வருண் தவான். தமிழில் தரமணி படத்தில் அறிமுகமானவர் வசந்த் ரவி. இந்தப் படத்தை தொடர்ந்து இவரது இரண்டாவது படமான ராக்கி ட்ரெய்லர் கடந்த இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. படத்தை அறிமுக இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார்.
’காலம் ஒரு துரோகி’ என்ற வரிகளில் கவிதை தொடங்கி பின்னணி குரல் ஒலிக்க, அழுத்தமான காட்சிகளோடு அமைந்திருக்கும் 2 நிமிட ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் கோலிவுட்டின் பரிணாமத்தை மாற்றி அமைக்கும் என எதிர்பார்ப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.