தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 18, 2019, 9:10 PM IST

ETV Bharat / sitara

அசாம் மக்களுக்கு அக்‌ஷய் என்ன செய்தார் தெரியுமா?

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.2 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

akshay kumar

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வரலாறு காணாத அளவில் தண்ணீர் தடம் புரண்டு ஓடுகிறது. அம்மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் அசாமில் மிகவும் பிரசித்த காசிரங்கா பூங்கா முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியுள்ளது.

மேலும், போபிதோரா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்கினங்கள் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டுக்கு பிறகு போபிதோரா பூங்கா மோசமான விளைவுகளை தற்போது சந்தித்துள்ளது. வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்க 26 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மக்களை மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 1கோடியும், காசிரங்கா பூங்காவை சீரமைக்க ஒரு கோடியும் நிவாரணம் வழங்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலின்போது அக்ஷய் குமார் கனடா நாட்டு குடியுரிமைக் கொண்டவர் என விமர்சித்தவர்கள் தற்போது அவரது செயலை பாராட்டி வருகின்றனர். இதே போன்று பிரபல பாலிவுட் நடிகர்களும் உதவ முன்வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details