பாலிவுட் திரையுலகின் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர் வீரு தேவ்கன். 80-க்கும் அதிகமான படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். 'பூல் ஆர் கண்ட்டே' என்ற படத்தின் மூலம் அஜய் தேவ்கனை பாலிவுட் திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். 1999ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன் இருவரையும் முன்னணி கதாபாத்திரமாக வைத்து ’இந்துஸ்தான் கி கசம்’ எனும் படத்தையும் இயக்கியுள்ளார். வீரு தேவ்கன் காலமானது குறித்து பிரபல சினிமா விமர்சகர் தரண் ஆதர்ஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தந்தை காலமானார்
பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் காலமானார்.
ajay and veeru
இது குறித்து அந்த பதிவில், அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் இன்று காலை காலமானார். அவர் முத்திரை பதித்த சண்டைப் பயிற்சியாளர். அமிதாப் பச்சன், அஜய் தேவ்கனை வைத்து ‘இந்துஸ்தான் கி கசம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அவரது இறுதிச்சடங்கு மாலை 6 மணிக்கு நடைபெறும். தேவ்கன் குடும்பத்துக்கு எனது ஆழந்த இரங்கல்கள் என குறிப்பிட்டிருக்கிறார். பாலிவுட் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.