ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கும் படம் 'போதை ஏறி புத்தி மாறி'. இந்த படத்தில் பிரபல மாடல் அழகி பிரதைனி சர்வா, நடிகையாக அறிமுகமாகிறார்.
'நடிகைகள் கவர்ச்சி காட்டும் பார்பி பொம்மைகள் அல்ல' - பிரபல மாடல் காட்டம்! - பிரதைனி சர்வா
"நடிகைகள் வெறுமனே பார்பி பொம்மைகளாக, கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படுவதை ஏற்க முடியாது" என்று, மாடல் அழகி பிரதைனி சர்வா தெரிவித்தார்.
இப்படம் குறித்து பிரதைனி சர்வா கூறுகையில், "திரைப்படங்களில் சில பெண் கதாபாத்திரங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். பெண்களின் கதாப்பாத்திரம் பார்வையாளர்களை ஊக்குவிக்கும் அல்லது உற்சாகப்படுத்தும் வகையில் இருக்கிறது. நடிகைகள் வெறுமனே பார்பி பொம்மைகள் அல்லது கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக் கூடாது என்பதை நான் நம்புகிறேன்.
'போதை ஏறி புத்தி மாறி' படத்தின் கதை மற்றும் தனது கதாபாத்திரத்தை இயக்குநர் சந்துரு தன்னிடம் விளக்கியபோது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமானதாக இருந்தது. பல திடுக்கிடும் திருப்பங்களோடு திரில்லர் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை மக்கள் கொண்டாடுவார்கள். மக்களால் பேசப்படும் படமாக இருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.