சென்னை:விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்க சென்னை காவல் துறை ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழக்க முடிவுசெய்துள்ளது.
விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ்! - விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல்
விஜய் சேதுபதி மகளுக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்ட நபருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்க சென்னை காவல் துறை திட்டம். ஏற்கனவே, நித்யானந்தா, லலித் மோடி போன்றவர்களுக்கு இதேபோன்று ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் சேதுபதியின் மகளை குறித்து ஆபாசமாகவும், மிரட்டும் வகையிலும் சமூக வலைதளங்களில் பேசிய நபருக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் வழங்க கோரி, டெல்லி சிபிஐ - இன்டர்போல் அலுவலகத்திற்கு சிபிசிஐடி காவல் துறையினர் மூலமாக சென்னை காவல் துறை கடிதம் எழுதியுள்ளது.
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களை, அந்நாட்டு உதவியுடன் கண்டறிய புளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே, நித்யானந்தா, லலித் மோடி போன்றவர்களுக்கு இதேபோன்று ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.