தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜேம்ஸ் பாண்ட் படப்பிடிப்பில் வெடிவிபத்து - ஒருவர் காயம் - one injured

லண்டன் இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் படப்பின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

james bond

By

Published : Jun 5, 2019, 12:56 PM IST

ஹாலிவுட் திரைப்படங்களில் உலக அளவில் பெரும்பான்மையான ரசிகர்களை கொண்ட திரைப்படம் என்றால் அது ஜேம்ஸ் பாண்ட் படம் தான். அந்த வரிசையில் அடுத்ததாக வெளியாக உள்ள 25ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் அருகே உள்ள பைன்வுட் ஸ்டூடியோவில் நடைபெற்றுவருகிறது. ஹாலிவுட் இயக்குநர் கேரி ஜோஜி புகுநாகா இயக்கத்தில் பிரிட்டீஷ் நடிகர் டேனியல் க்ரைக் இப்படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், இங்கு படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிக்கான அரங்கம் தயார் செய்யப்பட்டு ஒத்திகைக்கான பயிற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த வெடிப்பொருட்கள் வெடித்த சம்பவத்தில் அரங்கத்தின் வெளியே இருந்த படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் காயமமைடைந்தார். மேலும் இந்த விபத்தில் அரங்கத்தின் மேற்கூரையும், சுற்றுச்சுவரின் சில பகுதிகளும் சேதமடைந்தன. இச்சம்பவம் படக்குழுவினர் இடையே லேசான பதற்றத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக ஜமாய்க்காவில் இத்திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கபட்டபோது கதாநாயகன் டேனியல் க்ரைக்கிற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஒருவார காலத்திற்கு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

டேனியல் க்ரைக், 2007ஆம் ஆண்டு வெளியான கேசினோ ராயல் திரைப்படத்தில் முதன்முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் அதைத் தொடர்ந்து வெளியான குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர் உள்ளிட்ட படங்களின் சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

ABOUT THE AUTHOR

...view details