அமெரிக்காவில் நிறவெறியின் காரணமாக ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் துறையினரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து அமெரிக்கா முழுவதுதிலும் Black Lives Matter என்ற முழக்கத்துடன் போராட்டங்கள் வெடித்தன.
நிறவெறிக்கு எதிரான பேரணியில் ஜெனிஃபர் லோபஸ்...! - ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்பு
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்புக்கு நீதிக்கோரி நடந்த பேரணியில் பிரபல நட்சத்திர ஜோடியான ஜெனிஃபர் லோபஸ், அலெக்ஸ் ரோட்ரிக்ஸ் கலந்துகொண்டது.
black-lives-matter-jlo-alex-rodriguez-join-march-for-racial-justice
இந்நிலையில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்புக்கு நீதி கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேரணி நடந்தது. இந்தப் பேரணியில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் அமெரிக்காவின் நட்சத்திர ஜோடியான ஜெனிஃபர் லோபஸ், அலெக்ஸ் ரோட்ரிக்ஸ் இணையும் பங்கேற்றது.
இந்தப் பேரணியில் முகமூடியுடன், கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு பங்கேற்ற ஜெனிஃபர் லோபசின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.