தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபல நடிகையாகத் திகழ்பவர், பிந்து மாதவி. தமிழ் பிக்பாஸில் கலந்துகொண்டு பரபரப்பாகிய பிந்து மாதவி இப்போது , தெலுங்கு டிஜிட்டலில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நான்ஸ்டாப் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொண்டுள்ளார். இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்பொழுதே பிந்துமாதவி ஆர்மி என பல ட்விட்டர் கணக்குகள் மற்றும் #ஹேஷ்டேக்குகள் தொடங்கப்பட்டு பரபரப்பாகி வருகிறது.
தமிழ்நாட்டிற்கு இதயத்தில் தனியிடம்!
இப்போட்டியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரபல நடிகர் நாகார்ஜூனா , உங்களுக்கு தமிழ்த் திரைத்துறை பிடிக்குமா? தெலுங்கு திரைத்துறை பிடிக்குமா? என்ற கேள்வியை பிந்து மாதவியிடம் கேட்க, 'சார்… இது நல்லது இது நல்லது இல்லனு சொல்ல முடியாது. இரண்டுமே எனக்கு ரொம்பப்பிடிக்கும் சார். சென்னைக்கும் எனக்கும் மிக ஆழமான உறவு இருக்கு. சென்னைக்கு என் இதயத்தில் தனி இடம் இருக்கு. சென்னையில் தான் நான் வேலை பார்க்கிறேன். என் தாய் மொழி தெலுங்கு.. இரண்டுமே எனக்கு இரண்டு கண்கள் மாதிரி தான்' எனக் கூற, சூப்பர் பதில் என்று நாகார்ஜூனா பாராட்டினார் .