தமிழ்நாடு

tamil nadu

'அப்டேட் விடு அர்ச்சு' ட்விட்டரில் வெறித்தன ட்ரெண்ட்!

'பிகில்' படத்தின் அடுத்த அப்பேட் குறித்து 'அப்டேட் விடு அர்ச்சு' என்ற ஹேஷ் டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் டிரண்டாக்கி வருகின்றனர்.

By

Published : Oct 4, 2019, 7:36 PM IST

Published : Oct 4, 2019, 7:36 PM IST

bigil

'தெறி', 'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும், இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

பெரும் பொருட்செலவில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவ்வருட தீபாவளி விருந்தாக பிகில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனையடுத்து இப்படத்தின் டீஸர், ட்ரெய்லருக்கு ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் படக்குழு இதுவரை எந்த வித அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதிகாத்து வருகின்றனர். படக்குழுவினரின் அமைதியை விரும்பாத ரசிகர்கள், '#அப்டேட்_விடு_அர்ச்சு' என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

இப்படம் தற்போது தணிக்கை குழுவுக்கு சென்றுள்ளதாகவும் அங்கு அவர்கள் படத்திற்கான சான்றிதழ் வழங்கியவுடன் படம் வெளியாகும் தேதியும், டீசர், டிரெய்லர் வெளியாகும் தேதியும் படக்குழு அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details