அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் படம், பிகில். இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் ஆகிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வந்து விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்தது. அடுத்த மாதத்துடன் படப்பிடிப்பும் முடிவடைந்து தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பிகில்’ படத்தின் அடுத்த முக்கிய அப்டேட்! - Update
தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் பிகில் படத்தின் அடுத்த அப்டேட் இன்று வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளரின் ட்வீட் செய்துள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக பிகில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாதி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில் வழக்கமான அப்டேட்களை போல இது சிங்கிள், டீசர், டிரைலர், இசை வெளியீடு, ரிலீஸ் தேதி போன்ற அப்டேட் அல்ல என்றும், இது தளபதி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரசிகர்கள் இப்போதே யூகிக்க தொடங்குங்கள் என்றும் குறிப்பிட்டு விஜய் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.