தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புதிய சிங்கிள் வெளியீடு, ஸ்டேஜில் பாடும் விஜய் - ரசிகர்களுக்கு டபுள் குஷி! - Bigil mp3 download

உனக்காக என்னும் மூன்றாவது சிங்கிள் வெளியாகவுள்ளது. ’பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பாடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

#UNAKAGA

By

Published : Sep 18, 2019, 3:00 PM IST

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பிகில்’. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் விஜய் பாடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

vijay sing in stage for bigil

நடனத்துக்குப் பெயர்போன விஜய், சிறந்த பாடகரும் கூட, அவர் குரலில் உருவான பல பாடல்கள் ஹிட்டடித்துள்ளன. முன்பெல்லாம் ரசிகர்களுக்காக மேடையில் பாடிய விஜய், உச்ச நட்சத்திரமான பிறகு அதனை தவிர்த்துவந்தார். கடைசியாக ‘நண்பன்’ இசை வெளியீட்டு விழாவில் பாடினார். தற்போது ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரஹ்மான் இசையில் பாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரமாண்டமாக நடக்கவுள்ள ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவுக்கு பேனர், கட்அவுட் வைப்பது கூடாது என ரசிகர்களிடம் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று மாலை 4.30 மணியளவில் ‘உனக்காக’ என்னும் லவ் டூயட் வெளியாகவுள்ளது. இதனை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

#BigilAudioLaunch #ThalapathyVijay #UNAKAGA

ABOUT THE AUTHOR

...view details