தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிகில் ஷுட்டிங் ஸ்பாட்டில் கான்ட்ராக்டர் நேசமணி! வைரலாகும் வீடியோ - Bigil Shooting spot fun video

பிகில் படத்தில் சிங்கப் பெண்களாக கலக்கியவர்களின் அலப்பறைகள் தாங்கமுடியாமல் கான்ட்ராக்டர் நேசமணியாக படத்தின் இயக்குநர் அட்லி மாறியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிங்கப்பெண்களுடன் இயக்குநர் அட்லி டிக்-டாக் விடியோ

By

Published : Nov 2, 2019, 11:12 PM IST

சென்னை: பிகில் பட ஷுட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் அட்லி மற்றும் சிங்கப் பெண்கள் ஆகியோர் இணைந்து உலக அளவில் ட்ரெண்டான ப்ரெண்ட்ஸ் பட கான்ட்ராக்டர் நேசமணி காட்சியை டிக்-டாக் விடியோவாக எடுத்துள்ளனர். அது தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

தளபதி விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் தீபாவளி ஸ்பெஷலாக வெளிவந்த படம் பிகில். நடிகை நயன்தாரா, இந்துஜா, பாலிவுட் நடிகர் ஜாக்கிஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருந்தனர். படம் தொடர்பாக கலவையான விமர்சனங்கள் வெளிவந்தபோதிலும், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக படத்தில் சிங்கப் பெண்களாக தோன்றி கால்பந்து போட்டியில் கலக்கிய இந்துஜா உட்பட இதர நடிகைகள் அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து பிகில் பட ஷுட்டிங்கின்போது நிகழ்ந்த வேடிக்கையான நிகழ்வுகளின் வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒன்றாக, கடந்த சில மாதங்களுக்கு முன் உலக அளவில் ட்ரெண்டான ப்ரெண்ட்ஸ் பட நேசமணி கதாபாத்திரத்தின் சீன்களை டிக்-டாக் வீடியோவாக இயக்குநர் அட்லி மற்றும் சிங்கப் பெண்கள் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

நேசமணியாக அட்லியும், மற்ற நடிகைகள் பிற கதாபாத்திரங்களில் இந்த வீடியோவில் நடித்துள்ளனர். மீண்டும் #Nesamani #Prayfornesamani போன்ற ஹேஷ்டாக்-குகளில் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details