சென்னை: ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான பிகில் பட ட்ரெய்லரை சரியாக 6 மணிக்கு படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஹீ இஸ் தி பிரைட் ஆஃப் நேஷன் - பிகிலின் வெறித்தன ஆட்டம்! - பிகில் ரிலீஸ் தேதி
இத்தனை நாள் காத்திருந்த ரசிகர்களுக்கு செமையான ட்ரீட் தந்துள்ளனர் பிகில் குழுவினர். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ், மிரட்டலான பின்னணி இசை, மாஸ் காட்சிகள் என விஜய் படத்துக்கே உண்டான அனைத்து அமசங்களுடன் படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது.
ஃபுட் பால் கிரவுண்டில் குட் மார்னிங் சொல்லச் சொல்லி தொடங்கும் பிகில் ட்ரெய்லர் அடுத்தடுத்து சரவெடி காட்சிகளால் ரசிகர்களுக்கு சிறந்த ட்ரீட்டாக அமைந்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை பவர்புல்லாக இருப்பதுடன், நயனின் காதலுக்கு மரியாதை ரெபரன்ஸ், ராயப்பன் கேரக்டரின் அதிரடி, மைக்கேல் கேரக்டரின் அடாவடி என 2 நிமிடம் 40 விநாடிகள் ஓடும் ட்ரெய்லர் முழுவதும் பரபரப்பான காட்சிகளோடு அமைந்துள்ளது.
ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் பிகில், தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. தெலுங்கில் இந்தப் படம் விசில் என்ற பெயரில் வெளியாகிறது.