தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல், பிகில், தெலுங்கில் வெளியான கிராக் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர், ஜி.கே. விஷ்ணு. இவர் மகாலட்சுமி என்பவரை இன்று திருமணம் செய்துகொண்டார்.
கரோனா: எளிமையாக திருமணம் செய்துகொண்ட பிகில் பட ஒளிப்பதிவாளர் - பிரபல ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு திருமணம்
சென்னை: பிகில் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு - மகாலட்சுமி திருமணம் இன்று எளிமையான முறையில் நடைபெற்றது.
Camera man vishnu
இத்திருமணம் சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் இனிதே நடைபெற்றது. கரோனா பாதுகாப்பு கருதி மணமகன், மணமகளின் பெற்றோர், மிக முக்கியமான உற்றார்- உறவினர்கள் புடை சூழ எளிய முறையில் இத்திருமணம் நடைபெற்றது.