தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#BIGILFootballTournament: கால்பந்தாட்ட தொடர் நடத்தும் 'பிகில்' படக்குழு - எப்போ...எங்கே...? - ஏஜிஎஸ் சினிமா

கால்பந்தாட்ட தொடர் நடத்துவதன் மூலம் வித்தயாசமான விளம்பர யுத்திகளை 'பிகில்' படக்குழுவினர் கையாள உள்ளனர்.

bigil

By

Published : Oct 9, 2019, 6:24 PM IST

'தெறி', 'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

பெரும் பொருட்செலவில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அக்டோபர் 12 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்துள்ளது. இவ்வருட தீபாவளி விருந்தாக பிகில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளை படத்தின் தயாரிப்பு தரப்பு செய்து வருகிறது. அதில் ஏஜிஎஸ் சினிமா நிறுவனம் - சென்னை சிட்டி எஃப்சி கால்பந்து கிளப் இணைந்து கால்பந்தாட்ட போட்டி தொடர் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

இம்மாதம் 19,20 ஆகிய தேதிகளில் சென்னை வேளச்சேரி கால்பந்து மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 64 அணிகள் விளையாடவுள்ளன. நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெறும் ஒரு அணிக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்த கால்பந்தாட்ட தொடர் மூலம் பிரமாண்ட விளம்பரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க: போட்றா வெடிய... வெறித்தனமாக காத்திருந்த ரசிகர்களுக்கு 'பிகில்' அடித்து சொன்ன ட்ரெய்லர்!

ABOUT THE AUTHOR

...view details