விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து நாளை வெளியாகவிருக்கும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த ஏரியா... அந்த ஏரியா... சவுதி அரேபியா... ஆல் ஏரியாவிலும் விஜய் அடிக்கும் 'பிகில்' வெறித்தனம்! - சவுதி அரேபியா பிகில் வெளியாகும் நேரம்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் சவுதி அரேபியாவில் புதிய சாதனையை படைத்துள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நாளை வெளியாகும் இப்படம் தமிழ் நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் வெளியாகிறது. குறிப்பாக முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பிகில் வெளிகிறது. இப்படம் அங்கு வெளியாகும் முதல் தமிழ் படமாகும். சவுதி அரேபியாவில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குளில் திரையிடப்படுகிறது. பிகில் திரைப்படம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் சிறப்புக்காட்சிகள் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு தொடங்குகிறது.