தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எகிப்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் 'பிகில்'! - சவுதி அரேபியாவில் 'பிகில்'

சென்ற வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற 'பிகில்' திரைப்படம் தற்போது எகிப்திலும் வெளியாகிறது. எகிப்தில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்னும் பெருமையை பிகில் பெற்றுள்ளது.

Bigil becomes the First Tamil Film to Release in EGYPT

By

Published : Oct 29, 2019, 10:28 PM IST

கடந்த 25ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட 'பிகில்' திரைப்படம் ரூபாய் 100 கோடியைத் தாண்டி வசூல் வேட்டை நடத்தியது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் 'பிகில்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. சவுதியில் வெளியான முதல் தமிழ் படம் என்னும் சாதனையை பிகில் நிகழ்த்தியது.

இந்தச் சாதனையை மீண்டும் முறியடிக்கும் வண்ணம் எகிப்து நாட்டில் வருகிற 30ஆம் தேதி 'பிகில்' வெளியாகிறது. எகிப்தில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்னும் பெருமையையும் பிகில் பெற்றிருக்கிறது.


இதையும் படிங்க: சல்மான்கானுக்குப் பிடித்த விஜய் படம் இதுவா?

ABOUT THE AUTHOR

...view details