அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘பிகில்’. இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘மெர்சல்’ படத்துக்குப் பிறகு அட்லி - விஜய் - ரஹ்மான் கூட்டணி அமைத்துள்ள இரண்டாவது படம் இது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இதில் இந்துஜா, யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
‘பிகில்’ சவுண்ட் எகிரும் நாள் அறிவிப்பு!
விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பிகில்’ படத்தின் இசை வெளியீடு தேதி குறித்து அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.
இந்த படத்திலிருந்து ’சிங்கப்பெண்ணே’, ‘வெறித்தனம்’ என இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், ‘பிகில்’ படத்தின் இசை வெளியீடு தேதியை அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஒவ்வொரு ஆண்டும் தளபதியின் பேச்சைக் கேட்க அவரது இசை வெளியீட்டு விழா அழைப்புக்காக காத்திருப்பேன். ஆனால் இந்த ஆண்டு அதை நானே அறிவிப்பேன் என்பதை நம்பமுடியவில்லை. கனவு ஒருநாள் உண்மையாகும் 19/9/19 சிறப்பான நாள். #BIGILAudioFromSept19 என பதிவிட்டுள்ளார்.