நடிகை வர்ஷா 96 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மாணவியாக தோன்றினார். அதன்பின் பல்வேறு சிறிய பட்ஜெட் படங்களில் நடித்த அவர் அட்லி - விஜய் கூட்டணியில் உருவான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பிகில் படத்தில் அவர், இந்துஜா, அம்ரித்தா அய்யர் ஆகியோருடன் இணைந்து கால்பந்து வீராங்கனையாக கலக்கியிருந்தார்.
பிகில் நடிகையின் அடுத்த பட டீசர் - பிகில் திரைப்படம்
பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்த வர்ஷா அடுத்ததாக நடித்துள்ள தெலுங்கு திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
varsha
இதனிடைய நடிகை வர்ஷா தெலுங்கில் நடித்துள்ள சூசி சூடாங்கானே என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் ராஜ் கண்டுக்குரியின் மகன் சிவா கண்டுக்குரி கதாநாயகனாக நடித்துள்ளார்.
கல்லூரிக் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை சேஷா சிந்து இயக்கியுள்ளார். இதில் மாளவிகா சதீசன், பவித்ரா, அனிஷ் குருவில்லா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.