தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பெரிய சூப்பர் ஸ்டார்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்' - ஆதங்கத்தை வெளிப்படுத்திய குஷ்பு! - குஷ்பு பற்றிய செய்திகள்

மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் தென்னிந்தியாவில் இருந்து வருகின்றனர். இந்தியாவின் சிறந்த நடிகர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தென்னிந்தியர்கள் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

kushboo

By

Published : Oct 21, 2019, 10:10 AM IST

இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் தென்னிந்திய சினிமா அதிக பங்களிப்பை செலுத்தி வருவதாக நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் நிறைவடைந்ததை, பிரதமர் நரேந்திர மோடி பாலிவுட் திரைப் பிரபலங்களுடன் இணைந்து கொண்டாடினார். அப்போது ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் முன்னணி திரையிசைப் பாடகர்களைக் கொண்டு பிரத்யேகமாக உருவாக்கிய, காந்திக்குப் பிடித்த பிடித்த 'வைஷ்ணவ ஜனதோ' பாடலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

குஷ்பு ட்வீட்

அத்துடன் பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, தாரக் மேதா குழுமம், இந்திய அரசின் கலாசார அமைச்சகம் ஆகியோர் தயாரித்திருந்த மூன்று வீடியோக்களையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

இந்த விழாவில் ஆமீர்கான், ஷாருக்கான், ராஜ்குமார் ஹிரானி, கங்கனா, ஆனந்த் எல்.ராய், உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். ஆனால், இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைத்துறை பிரபலங்கள் இல்லாதது தென்னிந்திய திரைத்துறையினரிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், 'மரியாதைக்குரிய பாரத பிரதமர் மோடியைச் சந்தித்த அனைவருக்கும் நன்றி. மோடிக்குத் தற்போது ஒரு காரியத்தை நினைவூட்ட விரும்புகிறேன். இந்தி திரைப்படங்கள் மட்டும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தவோ பங்களிக்கவோ இல்லை. தென்னிந்திய சினிமா தான், அதிக பங்களிப்பு செய்கிறது.

குஷ்பு ட்வீட்

சிறந்த திறமை தென்னிந்தியாவில் இருந்து வருகிறது. மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் தென்னிந்தியாவிலிருந்து வருகிறார்கள். இந்தியாவின் சிறந்த நடிகர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தென்னிந்தியர்கள். அவர்களை ஏன் அழைக்கவில்லை. ஏன் இந்த பாகுபாடு பார்க்கிறீர்கள்.

தென்னிந்திய சினிமாவை நாட்டின் பெருமையாக மாற்றிய எங்களது முன்னோடிகளுக்கும் சகநண்பர்களுக்கும் இனி வரும் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை அளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று தனது வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதையும் வாசிங்க: தென்னிந்திய சினிமா புறக்கணிக்கப்படுகிறது - மோடியிடம் முறையிட்ட உபாசனா

ABOUT THE AUTHOR

...view details