ரசிகர்களால் நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் 5 நிகழ்ச்சி நேற்று (அக்.4) முதல் தொடங்கியது. வழக்கம்போல் நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்தச் சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்ச்சி தொடங்கி ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் சண்டை எதுவும் இல்லாமல் போட்டியாளர்கள் மகிழ்ச்சியாகவே தங்களது நாளை கழிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஒரு கதை சொல்லு ராம் என்று தொடங்குகிறது. அப்போது தாமரை செல்வியிடம் ராஜு கதை சொல்ல கடைசியில் அவரை பயமுறுத்துகிறார்.
அந்தச் சத்தத்தைக் கேட்டு அவர் அலற, அருகிலிருந்தவர்கள் சிரிப்புகளுடன் ப்ரோமோ முடிக்கிறது. தினமும் 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இதையும் படிங்க:கிடைத்தது பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்... இவர்கள் தானா?