தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’வெறித்தனமான' நடனத்துடன் நன்றி தெரிவித்த சாண்டி! - வெறித்தனபாடலுக்கு ஆடும் சாண்டி

'பிக்பாஸ் சீசன் 3இல் தன்னை இறுதிச்சுற்று வரை கொண்டுவந்த மக்களுக்கு நடன இயக்குநர் சாண்டி நன்றி தெரிவித்துள்ளார்.

sandy

By

Published : Oct 9, 2019, 11:21 PM IST

Updated : Oct 10, 2019, 8:26 AM IST

'பிகில்' படத்தின் வெறித்தனம் பாட்டிற்கு நடன இயக்குநர் சாண்டி ஆடியுள்ள வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் பிகில், இப்படத்தில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கும் மரணமாஸ் காட்டி வருகிறது.

இப்பாடலுக்கு பிரபலங்கள் நடனமாடி தங்கள் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். தற்போது இந்த பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி ஆடும் விடியோ வெளியாகியுள்ளது. சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 3-இல் கலந்துக்கொண்ட அவர் இறுதிச்சுற்று வரை சென்றார்.

சாண்டி வெறித்தனம் வீடியோ

இந்நிலையில் சாண்டி தனக்கே உரித்தான பாணியில் வெறித்தனம் பாடலுக்கு தனது குழுவினருடன் நடனமாடி தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் தன்னை தமிழ்நாட்டு மக்கள் பிக் பாஸ் சீசன் 3யின் இறுதிச்சுற்று வரை கொண்டு வந்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:'வெறித்தனம்' பாடி வெறித்தனமாக வைரலாகிய பிரபல இயக்குநரின் மகள்

Last Updated : Oct 10, 2019, 8:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details