'சென்னை சிட்டி கேங்கஸ்டார்' என்ற பாடலுடன் பிக்பாஸ் மூன்றாவது வாரம் தொடங்கியது. முதல் நாள் என்பதால் என்னவோ தெரியவில்லை ஒருவர் விடாமல் அனைவரும் அனிருத்துடன் பாடலை பாடிக்கொண்டு நடனமாடினர்.
பற்ற வைத்த அக்ஷரா
படித்துறை பாண்டி போல் அக்ஷராவும், வருணும் சிகப்பு கேட் அருகே அமர்ந்து நியாயம் பேசிக்கொண்டிருந்தனர். அக்ஷரா, ''உன்னை நான் காப்பாற்றுவதற்குள் பட்ட கஷ்டம் இருக்கே... உனக்கும், நாடியாவுக்கும் சமமாக வாக்கு விழுந்தது. நான் தான் காப்பாற்றினேன்" என்று பெருமை பேசினார்.
தலைவர் போட்டி
பிக்பாஸின் விதிமுறைகளை கடைப்பிடித்த நான்கு பேர் தலைவர் போட்டியில் கலந்துகொள்கின்றனர். இசைவாணி, சிபி, ராஜு, பவானி ஆகியோரின் பெயர்களை பிக்பாஸ் அறிவிக்கும்போது பார்க்கணுமே, அனைவரின் முகத்திலும் ஒரு கொலை வெறி.
'இவர் தலைவராக வரக் கூடாது' என நினைக்கும் நபர்களிடம் இம்சைகள் செய்து, முகத்தில் ஏதாவது ஒரு உணர்ச்சியை வரவைக்க வேண்டும் என்றார் பிக்பாஸ். பிக்பாஸ் இதை சொன்னவுடன் அபிஷேக் முகத்தில், இப்ப வரேன் பாரு. இதுவரைக்கும் அடக்கி வைத்திருந்தது எல்லாம் டைம் வந்துடுச்சு’னு காண்பிக்க போறேன்" என்று ஆவேசத்துடன் களத்தில் இறங்கினார்.
நகைச்சுவை செய்கிறேன் என இவர்கள் செய்ததை நம்மால் பார்க்கவே முடியவில்லை. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், சந்தானம் சொல்வதைப்போல்.... 'கோபம் வருவது போல் காமெடி செய்யாதே டா' என்று சொல்லிவிடலாம். அபிஷேக், நிரூப் பெண் வேடம் அணிந்து வந்தது, நமக்கே எரிச்சலூட்டும் வகையில் தான் இருந்தது.
அபிஷேக்கின் இம்சை
அபிஷேக் கேங்கான பிரியங்கா, நிரூப் செய்வதைப் பார்த்துத் தாங்க முடியாமல் முதலிலேயே சிரித்து வெளியேறினார் இமான் அண்ணாச்சி. கடைசி வரை பாவனி, ராஜு, சிபி எந்த ஒரு உணர்வும் காட்டாமல் இருக்கின்றனர்.
இவர்களின் இம்சையை பிக்பாஸுக்கே தாங்க முடியவில்லை போல, இது டைபிரேக்கர்க்கான நேரம் என்றார். நீங்கள் இவர்களில் யார் தலைவராக வேண்டும் என விருப்பப்படுகிறீர்களோ, அவர்களின் கழுத்தில் மாலை போட வேண்டும் என்றார். உடனே அனைவரும் சிபிக்கு அதிகமான மாலைகள் கொடுத்து தலைவராக தேர்வு செய்தனர்.
குழந்தைக்கு தலைவர் பதவி