தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#BIGG BOSS: மலேசிய துணை பிரதமருடன் செல்ஃபி எடுத்த #பிக்பாஸ் முகின் - நடிகர் கமல்ஹாசன்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்ற மலேசிய பாடகர் முகின் அந்நாட்டு துணை பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

bigg-boss-winner-mugen-rao

By

Published : Oct 23, 2019, 1:32 PM IST

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றவர் முகின் ராவ். மலேசியாவைச் சேர்ந்த இவர் பாடகராக உள்ளார். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற இந்த சீசனில், இயக்குநர் சேரன், நடன ஆசிரியர் சாண்டி, நடிகைகள் ஷெரின், சாக்ஷி, இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர். நடிகர் கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்கினார். 100 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் முகின், சாண்டி, லாஸ்லியா, தர்ஷன், சேரன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இதில் டைட்டில் வின்னராக முகின் வெற்றிவாகை சூடினார்.

முகின் தனக்கே உரித்தான பாணியில் எளிமை மற்றும் இயல்பாக நடந்துகொண்ட விதம் அவருக்கு வெற்றியை பரிசளித்தது. அவருக்கு ரசிகர்களும் அதிக அளவில் ஆதரவு அளித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டார். இந்த நிகழ்ச்சி கடந்த 6ஆம் தேதி முடிவடைந்தது. அதன் பின்னர் சொந்த நாட்டுக்கு திரும்பிய முகினுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவரை வாழ்த்தினர்.

மலேசிய துணை பிரதமருடன் செல்ஃபி எடுத்த முகின்

இந்த நிலையில், தற்போது மலேசியாவில் அந்நாட்டு துணை பிரதமர் டாக்டர். வாண் அஸிஷா வாண் இஸ்மாயிலை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து முகின், அவரிடம் வாழ்த்து பெற்றதுடன், கூடவே செல்ஃபியும் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள முகினுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க...

சக போட்டியாளரைத் திருமணம் முடிக்கும் 'பிக்பாஸ்' பிரபலம்... காதல் சக்சஸ் கதை!

ABOUT THE AUTHOR

...view details