தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

BB Day 52: சேட்டை செய்த பிரியங்கா... திணறிய சிபி - பிரியங்கா

பிக்பாஸ் வைல் கார்ட் என்ட்ரியாக டான்ஸ் மாஸ்டர் ஒருவர் இரண்டாவது நபராக வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.

BB Day 52
BB Day 52

By

Published : Nov 24, 2021, 2:13 PM IST

டான்ஸ் மரத்தானுடன் நேற்றைய (நவம்பர் 23) டாஸ்க் தொடங்கியது. வருணும், அக்‌ஷராவும், விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலிருந்து வெளியான, 'மாச்சோ என்னாச்சோ' பாடலுக்கு நடனமாடினர். இருவரும் அனைவரையும் விட ஒருபடி மேலே நடனமாடி அசத்தினர்.

டான்ஸ் டாஸ்க் முடிந்ததும் ஒரு சில நபர்கள் சரியாக நடனமாடாத காரணத்தினால், நடன ஆசிரியர் தேவை என இரண்டாவது வைல் கார்ட் என்ட்ரியை இறக்கினார் பிக்பாஸ். பிரபுதேவாவின், 'சொக்காமா' பாடல் ஒலிக்க முகமூடியுடன் பிரபு தேவாபோல் ஒருவர் வந்து நடனமாடினார். முகமூடி கழற்றியவுடன் பிரியங்கா, அமீர் என கத்தியபடி அவரைக் கட்டியணைத்துக் கொண்டார்.

வீட்டிற்கு ஒரு குழந்தை வந்தால் இவங்க பெயர் என்ன சொல்லு எனக் கேட்பதுபோல், பிரியங்கா ஒவ்வொரு நபரின் பெயரையும் சொல்லும்படி கேட்டார். அவரும் சளைக்காமல் அனைவரது பெயர்களையும் கூறினார்.

கனா காணும் காலங்கள்

இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக 'கனா காணும் காலங்கள்' என்ற தலைப்பில் பிக்பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறியது. சிபி ஸ்ட்ரிக்ட் வார்டனாகவும், அபிஷேக் ஞாபகமறதி உள்ள அலுவலராகவும், ராஜு தமிழ் ஆசிரியராகவும் நடந்துகொள்கின்றனர். புதிதாக வந்த அமீர் இசை, நடன ஆசிரியராக இருக்கிறார்.

சேட்டை செய்த பிரியங்கா

பள்ளி டாஸ்க் என்பதால், ஈனா மீனா டீகா எனக் குழந்தை பாடலை ஒலிக்கவைத்தார் பிக்பாஸ். உடனே புதிதாக வந்த நடன இயக்குநர் அமீர் அனைவரையும் எழுப்பிவிட்டு நடனமாடவைத்தார்.

பிரியங்கா பாடலைப் பாட அனைவரும் கத்திக்கொண்டே இருந்தனர். வார்டன் சிபி சொல்லியும் அனைவரும் சத்தம் போடுவதை நிறுத்தாமல் இருந்த காரணத்தினால், பிரியங்கா வெளியே அனுப்பப்பட்டார். உடனே பிரியங்கா வார்டன் இனிப்பு செய்துகொடுத்தால் மட்டுமே உள்ளே வருவேன் என்று அடம்பிடித்தார்.

முடி நிறத்தை மாற்றிய இருவர்

வார்டன் சிபியை அழைத்த பிக்பாஸ் ஐக்கி, அக்‌ஷரா இருவரும் தங்களின் தலைமுடிகளைக் கறுப்பாக்க வேண்டும் என்றார். கறுப்பாக முடி மாற்றிய பிறகு இருவருமே நல்ல அழகாகத்தான் இருந்தனர். அதேபோல் வருண் படிய முடியை வாரி வரும்படி வெளியே அனுப்பினர்.

வீட்டு பாடத்தில் பிரியங்கா பாடல் எழுதிவைத்ததால் வார்டன் சிபி காண்டாகி, புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டார். தண்டையாக இரண்டு கைகளிலும் காபி கப்பைக் கொடுத்து கைகள் விரித்த நிலையில் இருக்க வேண்டும் என்றார் சிபி. 'நான் இது எல்லாம் செய்ய மாட்டேன்' என்று பிரியங்கா வழக்கம்போல் சேட்டை செய்தார். இதனால் கடுப்பான சிபி, 'வெளியில போங்க' என தண்டனை கொடுத்தார்.

நேற்றைய டாஸ்கில் சமர்த்துப் பிள்ளை என்று அபினய்-க்கு பேட்ஜ் வழங்கப்பட்டது. பிரியங்கா, பாவனிக்கு தண்டனை வழங்கப்பட்டது. உண்மையில் பள்ளியில் பிள்ளைகளை 9 மணி நேரம் வைத்திருப்பது எவ்வளவு கடினம் என்பது இந்த டாஸ்க் மூலம் பலருக்கும் தெரியவந்தது.

இதையும் படிங்க:BB Day 51 : எதிர்பார்க்காத தலைவர்... முட்டிக்கொண்ட தாமரை, பிரியங்கா

ABOUT THE AUTHOR

...view details