ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி 20 நாள்களைக் கடந்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில், போட்டியாளர் நமீதா எதிர்பாராத விதமாக முதல் வாரத்தில் வெளியேறினார். இரண்டாவதாக நாடியாவும், மூன்றாவது நபராக நேற்று (அக்.24) அபிஷேக்கும் வெளியேறினார்கள்.
பிக்பாஸ் 5 - என்னது ஒரு வாரத்திற்கு இவ்வளவு சம்பளமா? - latest cinema news
பிக்பாஸ் 5ஆவது சீசனில் பங்கேற்றுள்ள 18 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
இந்நிலையில், இதில் கலந்துகொண்டுள்ள 18 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளன. வழக்கமாக இதில் கலந்து கொள்பவர்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்கப்படுவதில்லை. அதேபோன்று தான் இந்த ஆண்டும் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள், மக்களிடம் எந்த அளவிற்குப் பிரபலம் என்பதைப் பொறுத்து சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
18 போட்டியாளர்களின் சம்பள விவரங்கள் குறித்து கீழே காண்போம்.,
- அபினய்- ரூ. 2.75 லட்சம்
- மதுமிதா- ரூ. 2.5 லட்சம்
- நாடியா - ரூ. 2 லட்சம்
- பிரியங்கா - ரூ. 2 லட்சம்
- இமான் அண்ணாச்சி - ரூ. 1.75 லட்சம்
- நமீதா மாரிமுத்து - ரூ. 1.75 லட்சம்
- அபிஷேக் - ரூ. 1.75 லட்சம்
- ராஜு ஜெயமோகன்- ரூ. 1.5 லட்சம்
- பாவனி - ரூ. 1.25 லட்சம்
- வருண் - ரூ. 1.25 லட்சம்
- சின்ன பொண்ணு - ரூ. 1.5 லட்சம்
- இசை வாணி - ரூ. 1 லட்சம்
- அக்ஷரா ரெட்டி - ரூ.1 லட்சம்
- சுருதி - ரூ. 70 ஆயிரம்
- தாமரைச் செல்வி - ரூ.70 ஆயிரம்
- ஐக்கி பெர்ரி - ரூ.70 ஆயிரம்
- நிரூப் - ரூ.70 ஆயிரம்
- சிபி - ரூ.70 ஆயிரம்