மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணியில் தீபாவளி விருந்தாக வெளியான படம் பிகில். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
#BigilRainbowFlickChallenge: 'பிகில்' ஸ்டைலில் புட்பால் ஆடும் சாண்டி! - பிகில் விமர்சனம்
'பிகில்' படத்தில் விஜய் புட்பால் ஆடும் ஸ்டைலில் சாண்டியும் தற்போது புட்ஃபால் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்துவருகிறது.
இதனையடுத்து நடன இயக்குநர் சாண்டி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்ற பதிவிட்டுள்ளார். அதில் ‘பிகில்’ படத்தில் விஜய் புட்பால் விளையாடும் ஸ்டைலில் அவரும் விளையாடுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் தற்போது அதை வைராலாக்கி வருகின்றனர். ஏற்கனவே ‘பிகில்’ படத்தின் வெறித்தனம் பாடலுக்கும் சாண்டி தனது ஸ்டைலில் நடனமாடி இணையத்தை கலக்கியிருந்தார்.