தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பற்றவைத்த அபிஷேக் - குழப்பத்தில் வருண், பாவனி - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

பாவனி, வருண் இருவருக்கும் இடையே சண்டை வரவைக்க அபிஷேக் திட்டம் திட்டும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அபிஷேக்
அபிஷேக்

By

Published : Oct 21, 2021, 2:22 PM IST

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி 20 ஆவது நாளைக் நெருங்குகிறது. பிரியங்கா, அபிஷேக், நிரூப் ஆகியோர் ஒரு குழுவாக இணைந்து செய்யும் வேலைகள் பார்வையாளர்களிடையே எரிச்சலை ஏற்படுத்துகிறது.

அதிலும் அபிஷேக், தற்போது நடைபெற்று வரும் பஞ்சதந்திரம் டாஸ்கில் போட்டியாளர்களிடையே சண்டையை வரவைக்கப் பற்றவைப்பது கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

இதுதொடர்பாக புரொமோ வெளியாகியுள்ளது. அதில் அபிஷேக், " நீயும், நானும் டாப் ஐந்து இடங்களில் வரவேண்டும். வருண் வரக்கூடாது. அதனால் அவனை லிவிக் ஏரியாவில் விடாதே'' எனப் பாவனியிடம் கூறினார்.

வருணிடம் சென்று, "எப்படியாவது லிவிக் ஏரியா டார்கெட் செய்" என இருவருக்கும் சண்டை வரவைக்கத் திட்டம் திட்டுவது போல் புரொமோ முடிகிறது. அபிஷேக் செய்யும் வேலைகளைப் பார்த்தால் இந்த வாரம் மக்களிடம் குறைவான வாக்குகளைப் பெற்று அவர் தான் வெளியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:BB Day 16: நாணயத்தால் வெடித்த பூகம்பம்... சிதறிய போட்டியாளர்களின் ஒற்றுமை

ABOUT THE AUTHOR

...view details