ஜல்லிக்கட்டில் மட்டுமல்லாது பிக்பாஸிலும் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. சில காலம் தொகுப்பாளினியாக தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அதன் பிறகு சமூக வலைதளங்களில் மட்டுமே தலையை காட்டிக்கொண்டிருந்தார்.
அண்மையில் இவர் வட இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் லிவிங் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. மேலும் அவர் காதலருடன் கடற்கரையில் இருந்தபோது அவரை காவல்துறையினர் கைது செய்தனர் என்று ட்விட்டர் பதிவு ஒன்று வெளியானது.