தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார் பாலா. இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார். ஆனால் தயாரிப்பாளருடனான பிரச்னையால் படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பாலா தற்போது அடுத்த படத்துக்கான வேலைகளில் பிஸியாகியிருக்கிறார். இப்படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் அதர்வா நடிக்க இருப்பதாகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.