பிக் பாஸ் சீசன் 3இல் கலந்துக்கொண்ட நடன இயக்குநர் சாண்டி, இறுதிச்சுற்று வரை சென்றார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பும் தமிழ் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்பு சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் செலவிடும் நேரங்களை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் பதிவிட்டு வருகிறார்.
தலைவனுடன் இனி ஆட்டம் ஆரம்பம்...டான்ஸ் மாஸ்டர் சாண்டி.!
டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடிகர் சிம்புவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
sandy
இந்நிலையில் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வந்த சாண்டி, நடிகர் சரவணன், சிம்பு சந்தித்தார். இதில் சிம்பு சாண்டிக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். இதைத்தொடர்ந்து சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகர் கலையரசன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'தலைவன் கூட இனி ஆட்டம் ஆரம்பம்' என குறிப்பிட்டுள்ளார். தற்போது சிம்பு வெங்கட் பிரபு இயக்க உள்ள 'மாநாடு' படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.