சென்னை:பிக்பாஸ் 5ஆவது சீசனின், 5ஆம் நாளில் என்னவெல்லாம் நடந்தது என்பதைப் பார்க்கலாம். வியாழக்கிழமை (அக்.8) இரவு நடந்த நிகழ்வுகளோடு நிகழ்ச்சியைத் தொடங்கினார் பிக்பாஸ்.
'லேடியோ ப்யூட்டிஃபுல் லேடியோ' பாடலை ஐக்கி பாட தாமரைச் செல்வி, ரேம்ப் வாக் செய்தார். உடனே சக போட்டியாளர்கள் அனைவரும் ஜாலி மோடுக்கு சென்றுவிட்டனர். பிக்பாஸ் வீடு முழுவதும் இரவு நேரத்தில் சந்தோஷ மழை பொழிந்தது.
பிறகு மாஃபியா என்ற பெயரில் பிரியங்கா, தாமரைச் செல்வி, நமீதா ஆகியோர் விளையாடினார்கள். (அப்படி என்ன மாஃபியா விளையாட்டு'னு நீங்கள் கேட்கலாம்... அதைத் தான் நாங்களும் யோசித்தோம்.. ஆனால் கடைசி வரை அதை பிக்பாஸ் நம்மிடம் காண்பிக்கவில்லை)
நமீதாவை சீண்டும் தாமரை செல்வி
அந்த விளையாட்டின் போது, நமீதா மக்கு மாதிரி நடந்துகொண்டதாகத் தாமரைச் செல்வி சீண்டினார். இதனால் காண்டான நமீதா, இந்த வீட்டில் நாளை பெரிய சண்டை இருக்கிறது, அது உனக்கும், எனக்கும் தான். நம்மதான் ப்ரோமோவில் இருக்கப் போகிறோம் என்றார். (அப்போ சண்டை போட்டால் ப்ரோமோவில் இருப்போம் என்று தெரிந்துதான் இப்படிச் செய்கிறீர்களா?)
எல்லை மீறிய சண்டை
இப்படி நமீதாவும், தாமரைச் செல்வியும் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது தாமரைச் செல்வி, 'உன் குணத்திற்கு 400 குழந்தைகள் கூட வளர்ப்ப' என்று சொல்ல, அதை நமீதா 'உன் பொழப்புக்கு' எனத் தவறாக நினைத்துவிடுகிறார். இதனால், திடீரென இருவருக்கும் இடையே உண்மையில் கலவரம் வெடித்தது.
உடனே நமீதா என்னைப் பற்றிப் பேசினால், 'வயது வித்தியாசம் பார்க்காமல் அசிங்க, அசிங்கமாகத் திட்டி விடுவேன்' என்றார். இதனால் மனமுடைந்த தாமரைச் செல்வி அழுகத் தொடங்கவிட்டார். இப்படியே அன்றைய இரவு முழுவதும் கழிந்தது.
அப்போ சண்டை இல்லையா
அடுத்த நாள் காலை 8 மணிக்குப் போட்டியாளர்களை எழுப்புவதற்காக பிக்பாஸ், 'எட்டணா இருந்தா எட்டூரு என் பாட்டை கேட்கும்' பாடலை ஒலித்தார். பாடல் ஒலித்தவுடன் நெல்லிக்காய் மூட்டையை திறந்தவுடன் நெல்லிக்காய் சிதறி எப்பிடி ஓடி மூலைக்கு ஓடுமோ அதுபோல போட்டியாளர்கள் ஒவ்வொரு மூலையில் நடனமாடினர்.
பின்னர் ராஜு பாய், தாமரை செல்வியிடம், 'என்ன சண்டை போட்டு இரண்டு பேரும் கட்டி உருளுவீங்கன்ன பார்த்த படுத்து தூங்கிட்டீங்க' என்றார். உடனே தாமரைச் செல்வி, 'அக்காவுக்கும், தம்பிக்கும் இடையே சண்டை இருக்குது' எனக் கூறினார்.